உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / ஜப்பான் பாட்மின்டன்: காலிறுதியில் லக்சயா

ஜப்பான் பாட்மின்டன்: காலிறுதியில் லக்சயா

குமமோட்டோ: ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.ஜப்பானில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் தேஹ் மோதினர். அபாரமாக ஆடிய லக்சயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் லக்சயா, சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.மற்றொரு 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் பிரனாய், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கே மோதினர். இதில் ஏமாற்றிய பிரனாய் 18-21, 15-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை