மேலும் செய்திகள்
பாட்மின்டன் மிதுன் மஞ்சுநாத் வெற்றி
21-Dec-2024
பெங்களூரு: தேசிய பாட்மின்டன் 4வது சுற்றில் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.பெங்களூருவில், சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 86வது சீசன் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' அன்மோல் கார்ப், ஸ்ரீயான்ஷி மோதினர். இதில் ஏமாற்றிய அன்மோல் 12-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.மற்றொரு 4வது சுற்றுப் போட்டியில் தஸ்னிம் மிர் 21-19, 21-17 என ஆகர்ஷி காஷ்யப்பை தோற்கடித்தார். கடந்த முறை பைனல் வரை சென்ற தன்வி சர்மா 19-21, 18-21 என தேவிகா சிஹாக்கிடம் தோல்வியடைந்தார். மான்சி சிங் 19-21, 22-20, 13-21 என ருஜுலுவிடம் வீழ்ந்தார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஆயுஷ் ஷெட்டி 15-21, 21-11, 5-21 என அலாப் மிஷ்ராவிடம் வீழ்ந்தார். தேசிய விளையாட்டில் தங்கம் வென்ற தருண் 18-21, 12-21 என மிதுன் மஞ்சுநாத்திடம் தோல்வியடைந்தார்.
21-Dec-2024