உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / கிரிக்கெட் வீரர்களுக்கு எதிர்ப்பு * பிரமோத் பகத் ஆவேசம்

கிரிக்கெட் வீரர்களுக்கு எதிர்ப்பு * பிரமோத் பகத் ஆவேசம்

புதுடில்லி: ''மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் வகையில் கிரிக்கெட் வீரர்கள் 'ரீல்ஸ்' வெளியிட்டது, எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும்,'' என பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான 'லெஜண்ட் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பைனலில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்று சாம்பியன் ஆனது. இந்த உற்சாகத்தில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னா, ஹர்பஜன் சிங் என மூவரும் மாற்றுத் திறனாளிகளைப் போல நடந்து சென்று 'ரீல்ஸ்' வெளியிட்டனர்.இதற்கு பாரா பாட்மின்டன் வீராங்கனை மானசி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து ஹர்பஜன், ரெய்னா இணைந்து மன்னிப்பு கேட்டனர்.தற்போது பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத், தன் பங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில்,' வலிக்கும், இயலாமைக்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளது. மூன்று கிரிக்கெட் வீரர்களும் துவக்கத்தில் அவர்களது வலியை வெளிப்படுத்தினார். ஆனால் அவர்கள் கால்களை பிடித்து நடந்தது, மாற்றுத் திறனாளிகளை கேலி செய்வது போன்று தான் இருந்தது,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை