உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / சாத்விக்-சிராக் ஏமாற்றம்: டென்மார்க் பாட்மின்டனில்

சாத்விக்-சிராக் ஏமாற்றம்: டென்மார்க் பாட்மின்டனில்

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி தோல்வியடைந்தது.டென்மார்க்கில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கோபயாஷி ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-23 என போராடி இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 21-18 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் ஏமாற்றிய இந்திய ஜோடி 16-21 எனக் கோட்டைவிட்டது.ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக், சிராக் ஜோடி 21-23, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை