மேலும் செய்திகள்
இந்தியாவுக்கு 2 வெள்ளி: ஆசிய பளுதுாக்குதலில்
21-Dec-2024
உதய்பூர்: பாட்மின்டன் வீராங்கனை சிந்து திருமணம் ராஜஸ்தானில் நடந்தது.இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்து 29. ஐதராபாத்தை சேர்ந்த இவர், ஒலிம்பிக் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்), காமன்வெல்த் (2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்), ஆசிய விளையாட்டு (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), ஆசிய சாம்பியன்ஷிப் (2 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.சமீபத்தில் சையது மோடி சர்வதேச பாட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் கோலாகலமாக நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
21-Dec-2024