உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்

பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் இரண்டாவது சுற்றில் சிந்து தோல்வியடைந்தார்.சிங்கப்பூரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சிந்து, ரியோ ஒலிம்பிக் (2016) சாம்பியன், ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார். முதல் செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார் சிந்து. இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற கரோலினா 11-7 என முன்னிலை பெற்றார். பின் தொடர்ந்து 6 'கேம்' எடுத்த கரோலினா, முடிவில் 21-11 என செட்டை வசப்படுத்தினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது செட்டில் சிந்து ஒரு கட்டத்தில் 15-10 என ஆதிக்கம் செலுத்தினார். கடைசி நேரத்தில் நேரத்தில் ஏமாற்றிய சிந்து 19-20 என்ற நிலைக்கு சென்றார். முடிவில் 20-22 என செட்டை இழந்தார். ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 21-13, 11-21, 20-22 என தோல்வியடைந்தார். பிரனாய் ஏமாற்றம்ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரனாய், ஜப்பானின் நிஷிமோட்டோ மோதினர். இதில் பிரனாய் 13-21, 21-14, 15-21 என வீழ்ந்தார். பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 'நம்பர்-30' ஆக உள்ள இந்தியாவின் திரீஷா, காயத்ரி ஜோடி, உலகின் 'நம்பர்-2' இடத்திலுள்ள தென் கொரியாவின் லீ, பீக் ஜோடியை 21-9, 14-21, 21-15 என சாய்த்து, காலிறுதிக்கு முன்னேறியது. ஆறு முறைகடந்த 5 ஆண்டு, 11 மாதத்தில் உலக சாம்பியன்ஷிப் (2018), இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் (2019), சுவிட்சர்லாந்து ஓபன் (2021), மலேசிய ஓபன் (2023), டென்மார்க் ஓபன் (2023), சிங்கப்பூர் ஓபன் (2024) என கரோலினா மரினுக்கு எதிராக தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்றார் சிந்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை