அக்சய் சதம்: தமிழகம் அபாரம்
ஐதராபாத்: கூச் பெஹார் டிராபி லீக் போட்டியில் தமிழகத்தின் அக்சய் சாரங்தர் சதம் விளாசினார்.ஐதராபாத்தில் நடக்கும் கூச் பெஹார் டிராபி 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 222 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 74/1 ரன் எடுத்திருந்தது. ஸ்ரேனிக் (38), கிஷோர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு கிஷோர் (5) ஏமாற்றினார். ஸ்ரேனிக் (46) ஆறுதல் தந்தார். அபாரமாக ஆடிய அக்சய் சாரங்தர் (110) சதம் கடந்தார். தீபேஷ் (40) கைகொடுத்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 294 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஐதராபாத் சார்பில் யாஷ்வீர் 4 விக்கெட் வீழ்த்தினார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஐதராபாத் அணி ஆட்டநேர முடிவில் 22/3 ரன் எடுத்திருந்தது. தமிழகம் சார்பில் பிரனவ் ராகவேந்திரா 2 விக்கெட் சாய்த்தார்.