உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சென்னை அணி சோகம் தீரல: தொடர்ந்து 5வது தோல்வி

சென்னை அணி சோகம் தீரல: தொடர்ந்து 5வது தோல்வி

சென்னை: பேட்டிங்கில் தேறாத சென்னை அணி, 103 ரன் மட்டும் எடுத்தது. தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்தது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதின.தோனி கேப்டன்: சென்னை 'லெவன்' அணியில் ருதுராஜ், முகேஷ் சவுத்ரி நீக்கப்பட்டு ராகுல் திரிபாதி, அன்ஷுல் கம்போஜ் தேர்வாகினர். முழங்கை காயத்தால் இத்தொடரில் இருந்து ருதுராஜ் விலகியதால், மீண்டும் கேப்டனாக தோனி களமிறங்கினார். கோல்கட்டா 'லெவன்' அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக மொயீன் அலி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் ரகானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.விக்கெட் சரிவு: சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா (4), கான்வே (12) ஜோடி ஏமாற்றியது. வருண் சக்ரவர்த்தி வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய விஜய் சங்கர், மொயீன் அலி பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்த போது வருண் 'சுழலில்' விஜய் சங்கர் (29) சிக்கினார். திரிபாதி (16) நிலைக்கவில்லை. அடுத்து வந்த அஷ்வின் (1), ரவிந்திர ஜடேஜா (0), தீபக் ஹூடா (0) சொதப்பினர். நரைன் பந்தில் கேப்டன் தோனி (1) அவுட்டாக, மைதானமே அமைதியானது.துபே ஆறுதல்: நுார் அகமது (1) ஏமாற்றினார். ஹர்ஷித் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ஷிவம் துபே, வைபவ் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். சென்னை அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்தது. துபே (31), அன்ஷுல் கம்போஜ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.நரைன் அபாரம்: சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு குயின்டன் டி காக், சுனில் நரைன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஒரு சிக்சர் அடித்த குயின்டன், கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த போது கம்போஜ் பந்தில் குயின்டன் (23) அவுட்டானார். கம்போஜ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் ரகானே, கலீல் பந்தில் சிக்சர் அடித்தார். கலீல் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நரைன், அஷ்வின் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். நுார் அகமது 'சுழலில்' நரைன் (44) சிக்கினார்.நுார் அகமது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிங்கு சிங், ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 10.1 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரகானே (20), ரிங்கு (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

தோனி 'அவுட்' சர்ச்சை

சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் 3வது பந்தில், சென்னை கேப்டன் தோனிக்கு 'எல்.பி.டபிள்யு.,' முறையில் 'அவுட்' வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தோனி 'ரிவியூ' கேட்டார். மூன்றாவது அம்பயர் வினோத் சேஷன், பலமுறை 'ரீப்ளே' செய்து பார்த்தார். 'அல்ட்ரா எட்ஜில்' லேசான அதிர்வு இருந்தாலும், பந்து பேட்டில் பட்டது உறுதியாகவில்லை. இதனையடுத்து 3வது அம்பயர் தோனிக்கு 'அவுட்' வழங்கினார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.நான்காவது வீரர்நான்காவது ஓவரை வீசிய கோல்கட்டாவின் மொயீன் அலி, ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இம்முறை 'மெய்டன்' ஓவர் வீசிய 4வது பவுலரானார் மொயீன். ஏற்கனவே ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சர் (எதிர்: சென்னை), கோல்கட்டாவின் வைபவ் அரோரா (எதிர்: ஐதராபாத்), டில்லியின் முகேஷ் குமார் (எதிர்: பெங்களூரு) இப்படி சாதித்தனர். இவர்கள் நால்வரும் 'விக்கெட் மெய்டனாக' வீசினர்.இது குறைவு 20 ஓவரில், 103/9 ரன் மட்டும் எடுத்த சென்னை அணி, சேப்பாக்கம் மைதானத்தில் தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.* இது, இங்கு பதிவான 2வது குறைந்தபட்ச ஸ்கோரானது. கடந்த 2019ல் இங்கு நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 70 ரன்னுக்கு சுருண்டது.* சென்னை அணி, முதலில் 'பேட்' செய்து தனது 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2022ல் மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் முதலில் 'பேட்' செய்த சென்னை அணி 97 ரன்னுக்கு சுருண்டது.முதன்முறைசென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக 3 போட்டியில் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M. PALANIAPPAN, KERALA
ஏப் 12, 2025 16:25

இது என்ன டீ20 மேட்சா இல்லை டெஸ்ட் மேட்சா, டெஸ்ட் மேச்சைகாட்டிலும் மிகவும் மோசமாக ரன் குவிப்பு டீ20 யில் ஒரு பௌண்ட்ரி அடிக்க 63 பந்துகள் காத்து நின்று ஒரு புதிய சரித்திரம் படைத்த சி.ஸ்.கே க்கு 10 வது இடம் நிச்சயம்


தமிழன்
ஏப் 12, 2025 11:57

சந்திரமுகி படத்தில் வரும் வசனம்தான் ஞாபகம் வருகிறது, வக்ககல்லையாம் அவனுக்கு 9 பொண்....டி கேக்குதாம்.


Guna Gkrv
ஏப் 12, 2025 10:14

சென்னை அணி தேர்வு செய்த ஆட்கள் எல்லாம் மற்ற அணிகளில் சரியாக ஆடாமல் கழட்டிவிட்டவர்கள் அவர்களை எடுத்து வைத்துத்துக்கொண்டு எப்படி ஆடுவது? ஹூடா ,விஜய் ஷங்கர், திரிபாதி, மற்றும் பௌலர்கள் கலீல் அஹமட் , அஸ்வின் இப்படி உள்ள நபர்களை தேர்வு செய்து டோனி யை வைத்து வியாபாரம் செய்யும் சென்னை அணி எப்படி ஜெயிக்கும்? ஜடேஜா சுத்த வேஸ்ட்,மொத்தத்தில் சென்னை முதியோர்கள் அணி , டோனி கண்டிப்பாக இந்த வருடம் விளையாடியிருக்கக்கூடாது , இந்தியாவில் எத்துணை கிரிக்கெட் வீரர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் அவர்களை வாங்கி ஆட வைக்கலாம், இது போன்று செய்தால் அவர்களுக்கு பணம் வரும் ஆனால் பார்க்கும் நமக்கு காசு போய் நேரம் போய் மொத்தத்தில் அனைவரையும் அறிவு அற்றவர்கள் ஆக்கும் செயல், டோனி, ஜடேஜா ,ஹூடா, திரிபாதி , கலீல் , சௌத்ரி ,கான்வாய் ,ரச்சின் மொத்த டீம் வேஸ்ட் ,ஸ்ரீநிவாசன் சார் நீங்க காலத்தில் இறங்குங்கள் அப்பத்தான் இதற்க்கு ஒரு விடிவு பிறக்கும் உங்க செயல் அதிகாரி சுத்த வேஸ்ட் , stephan பிளமிங் அதைவிட வேஸ்ட் அதனால் டீமை மாற்றி அமையுங்கள் அடுத்து வருடமாவது .


GUNA SEKARAN
ஏப் 12, 2025 10:00

இந்த IPL என்பதே மிக மிக கேவலமான காட்சி. அதிலும் CSK RCB MI போன்றவை மகா மோசமானவை. கட்டணக் கொள்ளை, பந்தயக் கொள்ளை இன்னும் சொல்லக் கூடாத பல விஷயங்கள் .....


ramani
ஏப் 12, 2025 05:55

வெற்றி பெறும் எண்ணம் இல்லை போராடும் குணம் இல்லை. பத்தாவது இடத்திற்கு போட்டியில்லாமல் தேர்வு செய்ய பட்டுள்ளது சிஎஸ்கே


தமிழன்
ஏப் 12, 2025 03:36

பந்தை உருட்டி விட்டால் 6 ரன்கள் அடிக்கும் பேட் இருந்தால் சிஎஸ்கே அணிக்கு 11 பேட்களை தரவும்


தமிழன்
ஏப் 12, 2025 01:52

அணியில் தடவி தடவி ஆடும் வீரர்கள்தான் இருக்கிறார்கள் நல்லா இருந்த டீமும் நாசமா போன சிஎஸ்கேவும் அணிக்கு தற்போதைய தேவை 2 பவர் ஹிட்டர்கள் ஹூடா மற்றும் திரிபாதியை பயிற்சி செய்யும் போது வாழைப்பழ தோல்களை போட்டு விட்டு வழுக்கி விழுந்தவுடன் கை கால்களை உடைத்துக் கொண்டார்கள் என அணியிலிருந்து அகற்றிவிட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 2 பவர் ஹிட்டர்களை தேர்வு செய்ய வேண்டும் அப்போது அணி உருப்பட சான்ஸ் இருக்கு இவனுகள வெச்சுகிட்டு மெது பக்கோடா திங்கவோ பல்லாங்குழியோ கூட ஆட முடியாது


தமிழன்
ஏப் 12, 2025 01:08

ரூபாய்க்கு 2 வாழைப்பழம் என ஆட்களை தேர்ந்தெடுத்து ஆடினால் இப்படித்தான் இருக்கும் சிஎஸ்கே ஜெயிக்க என் 10 வயது பையனை அணிக்கு அனுப்புகிறேன் அவன் 25 ரன்களை அடிப்பான் ஐபிஎல் பயங்கர சூதாட்டம் என்று இன்று உணர்த்திய வயதான நிற்கவே தள்ளாடும் தாத்தா அணிக்கு நன்றி இனி ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் ஆசையே போய்விட்டது இநுத கேவலமான ஆட்டத்தை பார்ப்பதற்கு பதிலாக பொழப்பை பார்த்தாலாவது ₹200 கிடைக்கும்


தமிழன்
ஏப் 12, 2025 00:58

T20 வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் மேட்ச் ஜாம்போவன் ராகுல் டிராவிட் அவர்களுக்கே டப் கொடுக்கும் அணியாக மாறி இருக்கும் CSK அணிக்கு வாழ்த்துக்கள்


தமிழன்
ஏப் 12, 2025 00:48

திருபாதி, ஹூடாவையையெல்லாம் ஒரு கிரிக்கெட் வீரர்கள் என மெகா ஏலத்தில் அனுபவம்வாய்ந்த ஃபெளிம்மிங் எப்படி கணித்தார் என்று ஆச்சரியமாக உள்ளது எல்லா அணிக்கும் பந்தை அடிக்கத்தான் பேட் தேவை ஆனால் சென்னை அணிக்கோ எழுந்து நிற்கவே பலமான கைத்தடி தேவைப்படுகிறது திருபாதி 10 பந்து ஆடிய போதே மேட்ச் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் முடிவு அப்போதே தெரிந்தது எல்லோரும் டி20 மேட்ச் ஆடினால் திரிபாதி ஆஸ்திரேலியா கிரவுண்டில் டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டு இருந்தார் சென்னை அணி அதி தீவிர ஐசியூவில் உள்ளது அதற்கு உயிர் பிழைக்கவே வாய்ப்பு மிகவும் குறைவு யாரும் ஆக்சிஜன் கொடுக்க தயாராக இல்லை கேவலமான அணி தேர்வு நிர்வாகம் சென்னை அணி ரசிகர்களுக்கு சூடு மானம் சொறனை இருந்தால் அடுத்து சென்னை விளையாடும் எந்த ஒரு போட்டியையும் பார்க்க மாட்டார்கள் சென்னை அணி செத்த பாம்பு இனி அதை அடிக்க எந்த அணியும் தேவையில்லை தானே அழிந்து கொண்டிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை