மேலும் செய்திகள்
பும்ரா, ஜடேஜா நம்பர்-1: ஐ.சி.சி., தரவரிசையில்
10 hour(s) ago
தொடரை வென்றது இந்தியா: யூத் டெஸ்டில் அசத்தல்
10 hour(s) ago
இளம் இந்தியா முன்னிலை
07-Oct-2025
நத்தம்: டி.என்.பி.எல்., தகுதிச் சுற்று-1ல் இன்று கோவை, திருப்பூர் அணிகள் மோதுகின்றன.தமிழகத்தில், டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் லீக் சுற்றில் மோதின. முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த 'நடப்பு சாம்பியன்' கோவை (12 புள்ளி), திருப்பூர் (8), சேப்பாக்கம் (8), திண்டுக்கல் (8) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடங்களை பிடித்த நெல்லை (7 புள்ளி), திருச்சி (6), மதுரை (5), சேலம் (2) அணிகள் வெளியேறின.திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் இன்று நடக்கும் தகுதிச் சுற்று-1ல், முதலிரண்டு இடங்களை பிடித்த கோவை, திருப்பூர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி பைனலுக்கு தகுதி பெற மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். ஆக. 2ல் சென்னையில் நடக்கும் தகுதிச் சுற்று-2ல், 'எலிமினேட்டர்' போட்டியில் (சேப்பாக்கம்-திண்டுக்கல், ஜூலை 31) வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். பைனல் ஆக. 4ல் சென்னையில் நடக்கிறது.லீக் சுற்றில் 7 போட்டியில், 6 வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற கோவை அணிக்கு கேப்டன் ஷாருக்கான் (222 ரன், 11 விக்கெட்) 'ஆல்-ரவுண்டராக' நம்பிக்கை தருகிறார். பேட்டிங்கில் சுஜய் (152), முகிலேஷ் (147) கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம். பவுலிங்கில் முகமது (9 விக்கெட்), சுப்ரமணியன் (7) அசத்தினால் மீண்டும் பைனலுக்கு முன்னேறலாம்.லீக் சுற்றில் 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வியை பதிவு செய்த திருப்பூர் அணிக்கு பேட்டிங்கில் துஷார் ரஹேஜா (261 ரன்) பலம் சேர்க்கிறார். கணேஷ் (150), அமித் சாத்விக் (145) கைகொடுத்தால் நல்லது. பவுலிங்கில் நடராஜன் (12), அஜித் ராம் (10), முகமது அலி (9) சாதித்தால் நேரடியாக பைனலுக்குள் நுழையலாம்.
10 hour(s) ago
10 hour(s) ago
07-Oct-2025