மேலும் செய்திகள்
டுபிளசி சாதனை சதம்: 'டி-20' அரங்கில் அசத்தல்
30-Jun-2025
பசட்டெர்ரே: டிம் டேவிட் அதிவேக சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலியா அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 'டி-20' தொடரை வென்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்ற ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது (2-0). மூன்றாவது போட்டி நேற்று பசட்டெர்ரேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார். ஹோப் ஆறுதல்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. 11.4 ஓவரில் 125 ரன் சேர்த்த போது பிரண்டன் (62 ரன், 36 பந்து) அவுட்டானார். ஹோப், சர்வதேச 'டி-20'ல் முதல் சதம் அடித்தார். தவிர, முதல் விக்கெட் கீப்பர், கேப்டன் என பெருமை பெற்றார். கெய்லுக்கு அடுத்து, மூன்று வித (டெஸ்ட், ஒருநாள், 'டி-20') கிரிக்கெட்டிலும் சதம் அடித்த, 2வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார். டேவிட் சதம்ஆஸ்திரேலிய அணியை மிட்சல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), இங்லிஸ் (15), கிரீன் (11) என 'டாப் ஆர்டர்' வீரர்கள் கைவிட, 87/4 ரன் என திணறியது. பின் வந்த டிம் டேவிட், மிட்சல் ஓவன் ஜோடி சிக்சர் மழை பொழிந்தது. 16 ஓவரில் 211/4 ரன் குவித்தது. கடைசியில் ரூதர்போர்டு பந்தில் பவுண்டரி அடித்த டேவிட், 'டி-20' அரங்கில் (283 போட்டி) முதல் சதம் கடந்தார். ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 215/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதன் முறையாக, 'டி-20' தொடரை 3-0 என கைப்பற்றியது. டேவிட் (37 பந்தில் 102 ரன், 11x6, 6-x4), ஓவன் (16ல் 36 ரன்) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் வீரர்நேற்று 37 பந்தில் 102 ரன் எடுத்த டிம் டேவிட், சர்வதேச 'டி-20'ல் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஆனார் (முன்னதாக 2024ல் இங்லிஸ், 43 பந்து, எதிரணி-ஸ்காட்லாந்து). * சர்வதேச 'டி-20'ல் அதிவேக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் (16 பந்து). இதற்கு முன் ஸ்டாய்னிஸ் (2022, இலங்கை), ஹெட் (2024, ஸ்காட்லாந்து) தலா 17 பந்தில் அரைசதம் அடித்து இருந்தனர்.6 முறைசர்வதேச 'டி-20'ல் 200 ரன்னுக்கும் மேல் என்ற இலக்கை அதிக முறை 'சேஸ்' செய்து வென்ற அணியானது ஆஸ்திரேலியா (6 முறை). இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் தலா 5 முறை இதுபோல வெற்றி பெற்றுள்ளன.
30-Jun-2025