உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதியில் வடக்கு மண்டலம் * துலீப் டிராபி தொடரில்

அரையிறுதியில் வடக்கு மண்டலம் * துலீப் டிராபி தொடரில்

பெங்களூரு: துலீப் டிராபி தொடரின் அரையிறுதிக்கு வடக்கு மண்டல அணி முன்னேறியது. காலிறுதியில் 52 ரன் வித்தியாசத்தில் மேற்கு மண்டலத்தை வென்றது.பெங்களூருவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் காலிறுதி போட்டிகள் நடந்தன. முதல் காலிறுதியில் கிழக்கு மண்டலம், வட கிழக்கு மண்டல அணியை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 251, மேற்கு மண்டலம் 187 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வடக்கு மண்டலம் 222 ரன் எடுத்தது. 287 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கு மண்டலம், மூன்றாவது நாள் முடிவில் 220/7 ரன் எடுத்து, 67 ரன் பின்தங்கி இருந்தது.நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. அபித் முஷ்தாக் சுழலில் தனுஷ் கோடியன் (0) போல்டானார். மீண்டும் மிரட்டிய அபித், துஷார் தேஷ்பாண்டேவை (5) வெளியேற்றினார். சற்று தாக்குப்பிடித்த உர்வில் படேல் (25), நிஷாந்த் பந்தில் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில் மேற்கு மண்டல அணி, 234 ரன்னில் ஆல் அவுட்டானது. அபித் முஷ்தாக் 4 விக்கெட் சாய்த்தார். வடக்கு மண்டல அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதில், மத்திய-கிழக்கு மண்டலம், தெற்கு-வடக்கு மண்டல அணிகள் (ஆக. 30-செப். 2) மோத உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்