ராகுல் சதம்... இந்தியா அபாரம்
வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராகுல் சதம் அடித்தார். சுப்மன் கில் 98 ரன் எடுக்க, தேவ்தத் படிக்கல், ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தனர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 368 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 159/1 ரன் எடுத்து, 209 ரன் பின்தங்கியிருந்தது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ராகுல், டெஸ்ட் அரங்கில் 13 வது சதம் கடந்தார். ஜேமிசன் பந்தில் தேவ்தத் (80) போல்டானார். ராகுல் 136 ரன் எடுத்து, ஸ்மித் பந்தில் அவுட்டானார். சுப்மன் கில் 98 ரன்னில் அவுட்டானார். மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 486/4 ரன் எடுத்து, 118 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரிஷாப் (55), அன்சுல் கம்போஜ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.