உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மந்தனா நம்பர்-3 * ஒருநாள், டி-20 பேட்டர் வரிசையில்...

மந்தனா நம்பர்-3 * ஒருநாள், டி-20 பேட்டர் வரிசையில்...

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள், 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 3வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள், சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மூன்று இடம் முன்னேறி, 'நம்பர்-3' இடம் பிடித்தார். சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் 54, 105 ரன் விளாசினார். 2 இடம் பின்தங்கிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 13வது, 6 இடம் முன்னேறிய ஜெமிமா 15வது இடங்களில் உள்ளனர். ஒருநாள் பேட்டர் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் லாரா 'நம்பர்-1' இடத்தில் உள்ளார்.'டி-20'ல் மூன்றுசர்வதேச 'டி-20' பேட்டர் வரிசையில் ஸ்மிருதி மந்தனா, ஒரு இடம் முன்னேறி, 3வது இடம் பெற்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர் 10, ஜெமிமா 15வது இடத்தில் உள்ளனர். 'டி-20' பவுலர்களில் இந்தியாவின் தீப்தி சர்மா, 2 இடம் முன்னேறி, 2 வது இடம் பிடித்தார். 'டி-20' பேட்டர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனே, 'நம்பர்-1' ஆக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை