மேலும் செய்திகள்
தமிழக அணி ரன்குவிப்பு
23-Dec-2025
ஷிமோகா: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (3 நாள், 16 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் நடத்தப்படுகிறது.ஷிமோகாவில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 269, உ.பி., 260 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில், தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 43/1 ரன் எடுத்து, 52 ரன் முன்னிலை பெற்றது.நேற்று மூன்றாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ரிஷாப் ஸ்ரீராம் (33), அபிமன் சுந்தர் (12), புகழ் விஷ்ணு (22) அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆர்ய கணேஷ், 86 பந்தில் 69 ரன் எடுத்து கைகொடுத்தார்.பின் வரிசையில் ரிஷி கண்ணன் மட்டும் 13 ரன் எடுத்தார். மற்றவர்கள் 'டக்' அவுட்டாக, தமிழக அணி, இரண்டாவது இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. பின் 201 ரன் எடுத்தால் வெற்றி என உ.பி., களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்சில் 95 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்தது. பின் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் ரிஷி கண்ணன் 3, செல்லதுரை 2 விக்கெட் சாய்த்தனர். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தன.
23-Dec-2025