மேலும் செய்திகள்
பும்ரா, ஜடேஜா நம்பர்-1: ஐ.சி.சி., தரவரிசையில்
56 minutes ago
தொடரை வென்றது இந்தியா: யூத் டெஸ்டில் அசத்தல்
57 minutes ago
இளம் இந்தியா முன்னிலை
07-Oct-2025
பிரிட்ஸ் சதம்: தென் ஆப்ரிக்கா அபாரம்
06-Oct-2025
நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங், 59 பந்தில் 70 ரன் (5 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். கேப்டன் அஷ்வின் (15) ஆறுதல் தந்தார். திண்டுக்கல் அணி 19.4 ஓவரில் 136 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நெல்லை சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.சுலப இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு அருண் கார்த்திக் (45), கேப்டன் குருசாமி அஜிதேஷ் (43*) நம்பிக்கை அளித்தனர். நெல்லை அணி 17.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.லீக் சுற்றின் முடிவில் 'டாப்-4' இடம் பிடித்த கோவை (12 புள்ளி), திருப்பூர் (8), சேப்பாக்கம் (8), திண்டுக்கல் (8) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.
56 minutes ago
57 minutes ago
07-Oct-2025
06-Oct-2025