மேலும் செய்திகள்
வங்கதேசம் செல்லுமா இந்தியா * தமிம் இக்பால் எதிர்பார்ப்பு
4 hour(s) ago
வருகிறார் ஹர்திக் பாண்ட்யா: ஆப்கன் தொடரில் வாய்ப்பு
4 hour(s) ago
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
30-Aug-2026 | 1
பார்படாஸ்: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார் டிராவிட்.இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவிக்காலம் 'டி-20' உலக கோப்பை பைனலுடன் நிறைவடைந்தது. கடந்த 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றோடு வெளியேறியது. இம்முறை இவரது பயிற்சியின் கீழ் அசத்திய இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 'டி-20' உலக கோப்பை வென்று சாதித்தது. பைனலில் வெற்றி பெற்ற பின் இந்திய வீரர்கள் டிராவிட்டை துாக்கி கொண்டாடினர். இதுகுறித்து டிராவிட் கூறுகையில், ''இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்ற தருணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒன்று. இதற்காக வீரர்களுக்கும், சக பயிற்சியாளர் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் நாட்களில் இந்திய அணி நிறைய உலக கோப்பை வெல்லும் என்று நம்புகிறேன்,'' என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
30-Aug-2026 | 1