உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / துலீப் டிராபி: அரையிறுதியில் வடக்கு மண்டலம்

துலீப் டிராபி: அரையிறுதியில் வடக்கு மண்டலம்

பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதிக்கு வடக்கு, மத்திய மண்டல அணிகள் முன்னேறின.பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி கிரிக்கெட் தொடருக்கான காலிறுதியின் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 405, கிழக்கு மண்டலம் 230 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வடக்கு மண்டல அணி 388/2 ரன் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்த போது கேப்டன் அங்கித் குமார் (198) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஆயுஷ் படோனி (204*) இரட்டை சதம் விளாசினார். வடக்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 658/4 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.போட்டியை 'டிரா' செய்ய இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் வடக்கு மண்டல அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருதை அகிப் நபி (வடக்கு மண்டலம்) வென்றார்.மத்திய மண்டலம் 'டிரா'மற்றொரு காலிறுதியின் முதல் இன்னிங்சில் மத்திய மண்டலம் 532/4 ('டிக்ளேர்'), வடகிழக்கு மண்டலம் 185 ரன் எடுத்தன. மத்திய மண்டல அணி 2வது இன்னிங்சில் 331/7 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. பின், 679 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வடகிழக்கு அணி, 4ம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் 200/6 ரன் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி 'டிரா' ஆனது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மத்திய மண்டல அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை டேனிஸ் (மத்திய மண்டலம்) கைப்பற்றினார்.அரையிறுதியில் (செப். 4-7) தெற்கு - வடக்கு, மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள், வரும் செப். 11-15ல் நடக்கும் பைனலில் மோதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !