மேலும் செய்திகள்
இங்கிலாந்து அபார வெற்றி
30-May-2025
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், ஜேமி ஓவர்டன் தேர்வாகினர்.இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஜூன் 20ல், முதல் டெஸ்ட் லீட்சில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 36, இடம் பெற்றுள்ளார். இதுவரை 57 டெஸ்டில் (181 விக்கெட்) விளையாடிய வோக்ஸ், 2018ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் (157* ரன், 4 விக்கெட்) வெற்றிக்கு கைகொடுத்தார்.வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஜேமி ஓவர்டன் தேர்வாகினார். கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தொடர்கிறார்.இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஜேக்கப் பெத்தல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராலே, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், சோயிப் பஷீர், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), போப், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.
30-May-2025