உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சென்னை அணி கொள்கையில் மாற்றம்: கேப்டன் தோனி சூசகம்

சென்னை அணி கொள்கையில் மாற்றம்: கேப்டன் தோனி சூசகம்

மும்பை: ''வரும் போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும். ஒருவேளை தோற்றால், அடுத்த ஆண்டுக்கான சிறந்த கூட்டணியை கண்டறிவோம்,'' என கேப்டன் தோனி தெரிவித்தார்.வான்கடே மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையிடம் வீழ்ந்தது. சென்னை சார்பில் அறிமுக வீரர் ஆயுஷ் மாத்ரே (15 பந்தில் 32 ரன்) மட்டும் நம்பிக்கை தந்தார். நவீன 'டி-20'க்கு ஏற்ப ஷிவம் துபே, ஜடேஜா அதிரடியாக ஆடவில்லை. பும்ரா பந்தில் கேப்டன் தோனி (4) அவுட்டாகி ஏமாற்றினார். ஆறாவது தோல்வியை சந்தித்ததால், சென்னை ரசிகர்கள் வெறுத்து போயினர்.2023 போல முடியுமாபுள்ளிப்பட்டியலில் சென்னை அணி, கடைசி இடத்தில் உள்ளது. 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற, எஞ்சிய 6 போட்டிகளில் வெல்ல வேண்டும். 'ரன் ரேட்' அதலபாதாளத்தில் இருப்பதால், தேறுவது கடினம். இந்த உண்மையை உணர்ந்த கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளமிங், அடுத்த ஆண்டுக்கான அணியை தயார் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். 2022ல் சென்னை அணி 9வது இடம் பிடித்தது. இதிலிருந்து மீண்டு, 2023ல் சாம்பியன் பட்டம் வென்றது. இதே போல 2026ல் சாதிக்க திட்டமிடுகின்றனர். கொள்கை மாற்றம்சென்னை அணியில் அனுபவ வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும். ஹைடன், வாட்சன், ராயுடு போன்றவர்கள் இருந்ததால், 'டாடிஸ் ஆர்மி' என அழைக்கப்பட்டது. ஆயுஷ் மாத்ரே அசத்தியதால், அணியின் கொள்கை மாறியுள்ளது. அடுத்த ஆண்டு அமையும் புதிய கூட்டணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. பேட்டிங்கில் ஆயுஷ் மாத்ரே 17, ஷேக் ரஷீத் 20, டிவால்ட் பிரவிஸ் 21, வன்ஷ் பேடி 22, ரச்சின் 25, என இளம் படை களமிறங்கும். இவர்களுக்கு பக்கபலமாக ருதுராஜ், ஷிவம் துபே, ஜடேஜா, தோனி போன்ற 'சீனியர்'கள் இருப்பர். சிறந்த அணி தேர்வு: இது பற்றி தோனி கூறுகையில்,''இம்முறை தரமான கிரிக்கெட் விளையாடினோமா என சிந்திக்க வேண்டும். பேட்டர்கள் அதிக ரன் சேர்த்தால் தான் பவுலர்கள் சாதிக்க முடியும். மும்பைக்கு எதிராக குறைவான ஸ்கோர் எடுத்தோம். 'டெத் ஓவரில்' பும்ரா மிரட்டுவார். இவர் பந்துவீச வருவதற்கு முன் அதிரடியாக ரன் சேர்த்திருக்க வேண்டும். சிறப்பாக விளையாடியதால் தான் வெற்றிகரமான அணியாக வலம் வந்தோம். சிறப்பாக செயல்படாத தருணத்தில் உணர்ச்சிவசப்படக்கூடாது. யதார்த்த நிலையை யோசிக்க வேண்டும். 'பிளே-ஆப்' சற்றுக்கு தகுதி பெற முயற்சிப்பது அவசியம். இதற்கு வரும் போட்டிகள் அனைத்திலும் வெல்ல வேண்டும். ஒருவேளை சில போட்டிகளில் தோற்றால், அடுத்த ஆண்டுக்கான சிறந்த கூட்டணியை கண்டறிய வேண்டும். அருமையான 11 வீரர்களை தேர்வு செய்து, சிறப்பான முறையில் 'கம் பேக்' கொடுக்க வேண்டும்,''என்றார்.உண்மை நிலை: பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில்,''தற்போதைய தொடரில் சென்னை அணியின் உண்மை நிலை பற்றி தெரியும். சற்று தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறோம். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, திறமையான வீரர்களை கண்டறிய முயற்சிப்போம். அடுத்த ஆண்டுக்கான வெற்றி கூட்டணியை உருவாக்குவோம்,''என்றார்.

ரோகித் உற்சாகம்

மும்பை அணியின் ரோகித் 6 போட்டியில் 82 ரன் (0, 8, 13, 17, 18, 26) தான் எடுத்திருந்தார். சென்னை பந்துவீச்சை சிதறடித்த இவர், 45 பந்தில் 76 ரன் எடுத்து 'பார்மிற்கு' திரும்பினார். இது பற்றி ஆட்டநாயகன் ரோகித் கூறுகையில்,''என் திறமை மீது சந்தேகம் கிடையாது. கடினமாக பயிற்சி செய்து மீண்டு வருவேன். மனம் தெளிவாக இருந்தால், எல்லாம் சிறப்பாக நடக்கும். இதற்கு ஏற்ப சென்னைக்கு எதிராக அசத்தினேன். மும்பை அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளுடன் சரியான நேரத்தில் எழுச்சி கண்டுள்ளது. மும்பை, வான்கடே மைதானத்தின் ஒரு பகுதிக்கு எனது பெயர் வைக்கப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Jagan (Proud Sangi )
ஏப் 22, 2025 18:27

CSK நம்ம டீமே இல்ல. GT ல தான் தமிழ் வீரர்கள் இருக்கிறார்கள். சாய் சுதர்ஷனை 2 வருஷம் பெஞ்ச் தேய்க்க வச்சார் தல. அவருக்கு பிடித்ததெல்லாம் வயதான வீரர்கள் தான். 160-175 வரை தான் CSK டீமால் விளையாட முடியும், மற்றவர்கள் 200 பக்கம் போய்விட்டார்கள். தமிழ்நாட்டு இளம் வீரர்களே, CSK எடுக்க கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள். இல்லையென்றால் தண்ணீர் பாய் தான்.


Guna Gkrv
ஏப் 22, 2025 15:16

இந்தியாவில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர், ஏன் வெளிநாட்டு வீரர்கள் தான் வேண்டும் உள்நாட்டு வீரர்கள் வேண்டாம் ? இந்திய வீரர்களும் சாதிப்பார்கள் ஒரு போட்டியில் மொத்தமாகவும் இந்தியவீரர்களை களம் இருக்கலாமே, ரச்சின் பல போட்டிகளில் விளையாடவில்லை பிறகு ஏன் அவருக்கு வாய்ப்பு? ஆளை மாற்று ஆமை விளையாட்டு விளையாடும் ஜடேஜா எதற்க்கு தூக்கி வெளிய போடு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள், டோனி அவர்களே சிந்தியுங்கள், அடுத்த வருடம் நீங்கள் வெளியில் இருந்து இளம் விளையாட்டாளருக்கு வாய்ப்பு கொடுங்கள், ஐந்து காசுக்கு பெறாதவர்களை ஏலம் எடுத்து வைத்துக்கொண்டு விளையாடுவது ஒன்றும் சரி அல்ல , ஆரம்பம் முதல் முடியும் வரை கட்டய போட்டால் எப்படி ரன் எடுப்பது ? மற்ற மற்ற அணியை பாருங்கள் பவர் பிலே யிலும் கடைசி 4ங்கு ஓவரில் வெளுத்து வாங்குகிறார்கள் ஆனால் நீங்கள் டெஸ்ட் மேட்சை விட படு கேவலமாக ஆடுகிறீர்கள், உங்களால் ஓட முடியாது என்று தெரியும் பிறகு ஏன் மட்டை அடிக்க வரவேண்டும், இம்பாக்ட் ப்லயேராக இருக்க வேண்டியதுதானே, கீப்பிங் முடிந்து வெளியே உட்க்காருங்கள், இளைய தலைமுறைக்கு வலி விடுங்கள், நீங்க மேட்சில் இல்லை என்றாள் டிக்கெட் விற்க்காது பணம் கிடைக்காது அணிக்கு, அஸ்வினை நீக்குங்கள், அணிக்குள் ஆமையை வைத்துக்கொண்டு எப்படி வெல்வது?


Bahurudeen Ali Ahamed
ஏப் 22, 2025 10:23

எனக்கு ஒன்று புரியவில்லை மற்ற வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை தோனியை மட்டும் குறைசொல்வதேன்? 20-20யில் தொடக்கவீரர்கள் அதிவேகமாக ரன் எடுக்கவேண்டும் அதை செய்ய தவறுவதால்தான் தோல்வி ஏற்படுகிறது


Jagan (Proud Sangi )
ஏப் 22, 2025 18:29

இந்த டீமை தேர்வு செய்தவர் என்ற முறையில் அவர் தான் பொறுப்பு


Guna Gkrv
ஏப் 24, 2025 17:18

தம்பி, டோனி டீமில் எதற்க்கு முதலில் பெஞ்சில் உட்கர வேண்டும், சாய் சுதர்சன் அங்கு போய் நன்றாக விளையாடுகிறார், இங்கு பெஞ்சில் டோனி உட்கரு வைத்திருந்தார், அஸ்வின் ,ஜடேஜா ,சங்கர், ராச்சின் , இவர்கள் எதற்க்கு டீமில் ? அவர்களுக்கு வயது ஆகிவிட்டது அவர்களை பெஞ்சில் உட்க்காரவைத்து விட்டு இளம் வீரர்களுக்கு வழிவிடுங்கள், மீண்டும் இவர்களே அடுத்த சீசனிலும் தொடர்ந்தாள் இதே நிலைதான் இன்னும் கேவலமாக சி எஸ் கே போய்விடும். டீம் தோற்ப்பதர்கு டோணிதான் காரணம்.


Karthik
ஏப் 22, 2025 09:19

அப்போ அடுத்த வருஷமும் தோனி இருப்பாரா? CSK உறுப்புட்ட மாதிரிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை