உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கெய்க்வாட் சிகிச்சைக்கு ரூ. 1 கோடி: பி.சி.சி.ஐ., நிதியுதவி

கெய்க்வாட் சிகிச்சைக்கு ரூ. 1 கோடி: பி.சி.சி.ஐ., நிதியுதவி

மும்பை: அன்ஷுமன் கெய்க்வாட் சிகிச்சைக்கு பி.சி.சி.ஐ., ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கியது.இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட், 71. கடந்த 1975-87ல் விளையாடினார். 40 டெஸ்ட்(1985 ரன்), 15 ஒருநாள் போட்டிகளில் (269 ரன்) பங்கேற்றார். ஓய்வுக்கு பின், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளராக இருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், லண்டன் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உதவ வேண்டுமென ஜாம்பவான் கபில்தேவ் உட்பட பலர் வலியுறுத்தினர். நேற்று நிதியுதவி அறிவிப்பு வெளியானது. இது குறித்து பி.சி.சி.ஐ., உயர்மட்ட கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில்,''கெய்க்வாட் சிகிச்சைக்காக ரூ. 1 கோடி உடனடியக வழங்குமாறு பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா அறிவுறுத்தினார். அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்தார். தேவையான உதவிகள் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். கெய்க்வாட் உடல்நிலை குறித்து பி.சி.சி.ஐ., தொடர்ந்து கண்காணிக்கும். வலிமையாக மீண்டு வருவார் என நம்புகிறோம்,''என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Minimole P C
ஜூலை 18, 2024 08:18

As a young player, he scored a century against the visiting west indies team who were unbea on many matches as an er for combined Indian universities team. A good batsman particularly againt pace. Wish him a speedy recovery by the grace of God.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை