உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது வெற்றி

கிராஸ் ஐலெட்: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் (கிராஸ் ஐலெட்) நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 'சூப்பர்-8' சுற்றுக்குள் நுழைந்தது. ஸ்காட்லாந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.பிரண்டன் மெக்முல்லன் (60), கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் (42), ஜார்ஜ் முன்சே (35) கைகொடுக்க ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரலேியாவுக்கு வார்னர் (1), கேப்டன் மிட்சல் மார்ஷ் (8), மேக்ஸ்வெல் (11) ஏமாற்றினர். டிராவிஸ் ஹெட் (68), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (59) கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி