உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்

ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம்

லக்னோ: அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.லக்னோவில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) போட்டியில் மும்பை அணி (153/4, 18.3 ஓவர்), 6 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி., அணியை (150/9, 20 ஓவர்) வீழ்த்தியது.இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், கடைசி ஓவரில் 3 'பீல்டர்'களை மட்டும் உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்த வேண்டும் என ஆடுகள அம்பயர்கள், மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்மன்பிரீத் கவுர், அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த உ.பி., அணியின் சோபி எக்லெஸ்டோன், அம்பயரிடம் ஏதோ கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஹர்மன்பிரீத், எக்லெஸ்டோனை திட்டினார். பின் அம்பயர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர்.டபிள்யு.பி.எல்., விதிமுறைப்படி போட்டியில் அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எதிரணி வீராங்கனையை திட்டுவது குற்றம். இதனால் ஹர்மன்பிரீத் கவுருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை