உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்

தோல்விக்கு காரணம்: கேப்டன் ரோகித் விளக்கம்

ரோகித் பரிதாபம்நியூசிலாந்துக்கு எதிராக 3, அடிலெய்டில் 1 என தொடர்ந்து நான்கு டெஸ்டில் தோல்வியை சந்தித்தார் ரோகித் சர்மா (2024). தொடர்ந்து அதிக தோல்வியை சந்தித்த இந்திய கேப்டன்களில் மூன்றாவது இடத்தை தத்தா கெய்க்வாட் (1959), தோனி (2011, 2014) கோலி (2020-21) உடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் தலா நான்கு டெஸ்டில் தோல்வியை சந்தித்தனர். முதல் இரு இடங்களில் பட்டோடி (6 தோல்வி, 1967-68,) சச்சின் (5 தோல்வி, 1999-2000) உள்ளனர்.எடுபடாத 'பேட்டிங்'இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற அதிக ரன் எடுப்பது அவசியம். அடிலெய்டு டெஸ்டில் இந்திய பேட்டிங் எடுபடாதது ஏமாற்றம் அளித்தது. முதல் இன்னிங்சில் 30-40 ரன் குறைவாக எடுத்தோம். பும்ரா இரு முனைகளிலும் பந்துவீச முடியாது. மற்ற பவுலர்களும் பொறுப்பாக செயல்பட வேண்டும். ஷமியின் முழங்காலில் லேசான வீக்கம் ஏற்பட்டுள்ளது. நுாறு சதவீத உடற்தகுதி பெற்றால் மட்டுமே, 'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார்,''என்றார்.சோகமான நாள்சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று இந்தியாவுக்கு சோகமான நாளாக அமைந்தது. அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் தோல்வியடைந்தது. பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை பைனலில் இந்திய அணி, வங்கதேசத்திடம் தோற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ramani
டிச 08, 2024 07:13

பேட்ஸ்மேன் அடிக்கும் ஒவ்வொரு ஐம்பது அதற்கு மேல் நூறு என்று இருந்தால் மூன்று லட்சம் எக்ஸ்ட்ரா பணம் தரபடும். ஒவ்வொரு பெற்றோர்கள் எடுக்கும் மூன்று விக்கட் அதற்கு மேல் எக்ஸ்ட்ரா மூன்று லட்சம் தரப்படும் என்று சொல்லுங்கள்.அப்ப பாருங்கள் நம்மாள் ஆடும் ஆட்டத்தை. இவர்கள் எல்லோரும் பணத்துக்கு தான் ஆடுகிறார்கள்.வெற்றி பெற அல்ல. கெளதம் ஙம்பீரை முதலில் மாற்றவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை