உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / உலக பரிசு... டிராவிட் மறுப்பு

உலக பரிசு... டிராவிட் மறுப்பு

புதுடில்லி: கூடுதல் பரிசுத் தொகை ரூ. 2.5 கோடியை ஏற்க மறுத்துள்ளார் டிராவிட்.வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) சார்பில் ரூ. 125 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.இதில் இந்திய வீரர்கள் 15 தலா ரூ. 5 கோடி வழங்கப்பட்டன. பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட மற்ற பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 2.5 கோடி தரப்பட்டன. தவிர பயிற்சியாளராக இருந்த டிராவிட்டினை 51, கவுரவிக்கும் வகையில் பி.சி.சி.ஐ., சார்பில் வீரர்களுக்கு தரப்பட்டதைப் போல ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் டிராவிட். மற்ற பயிற்சியாளர்கள் போல தனக்கும் ரூ. 2.5 கோடி கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை