உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய மிடில்-ஆர்டர் குழப்பம் தீருமா: காம்பிர்-அகார்கர் உரசல்

இந்திய மிடில்-ஆர்டர் குழப்பம் தீருமா: காம்பிர்-அகார்கர் உரசல்

துபாய்: இந்திய அணியில் 'மிடில்-ஆர்டர்' குழப்பம் நீடிக்கிறது. ஸ்ரேயாஸ், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், ராகுல் தேர்வு தொடர்பாக அகார்கர், காம்பிர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19-மார்ச் 9) நடக்க உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்க உள்ளன. பன்ட் பக்கம் அகார்கர்: இதற்கான இந்திய உத்தேச அணியை அறிவித்த போது, 'விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தெரிவித்தார். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் ரிஷாப் பன்ட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக ராகுல் தான் கீப்பராக செயல்பட்டார். சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதி அணியை தேர்வு செய்த போது, இரண்டாவது கீப்பர் தொடர்பாக பயிற்சியாளர் காம்பிர், அகார்கர் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''இரு கீப்பர்கள் விளையாட இயலாது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ராகுல் தான் முதன்மையான கீப்பர். வாய்ப்பு கிடைத்தால், ரிஷாப் விளையாட தயாராக இருக்க வேண்டும்,''என்றார். ஸ்ரேயாஸ் ரன் மழை: அடுத்து, ஸ்ரேயாஸ் இடம் பெறுவதில் காம்பிர் உறுதியாக இருந்துள்ளார். துவக்கத்தில் ரோகித், சுப்மன், கோலி என அனுபவ வீரர்கள் உள்ளனர். இதனால் 'மிடில்-ஆர்டரை' பலப்படுத்த காம்பிர் விரும்புகிறார். இடது-வலது கை பேட்டர் கூட்டணியை களமிறக்குகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா சார்பில் 4-7ம் இடத்தில் வந்த பேட்டர்கள் சேர்ந்து 3 போட்டிகளில் 375 ரன் எடுத்தனர். இதில் ஸ்ரேயாஸ் மட்டும் 181 ரன் (சராசரி 60.33) குவித்தார். ராகுலுக்கு முன்பாக 5வது இடத்தில் வந்த இடது கை பேட்டர் அக்சர் படேல் (52, 41) அசத்தினார். தொடர்வாரா அக்சர்: து குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தேவாங் காந்தி கூறுகையில்,''முன்பு இந்திய அணி ரோகித், தவான், கோலி அடங்கிய 'டாப்-ஆர்டரை' அதிகம் சார்ந்து இருந்தது. 4வது இடத்தில் இருந்து அணியை கரை சேர்க்கக்கூடிய வீரர்கள் இல்லை. இதனால் 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல் (எதிர் பாக்.,), 2019 உலக கோப்பை அரையிறுதியில் (எதிர், நியூசி.,) சோபிக்க முடியவில்லை. இதை தவிர்க்க 'மிடில் -ஆர்டரில்' காம்பிர் அதிக கவனம் செலுத்துகிறார். இவரை பாராட்ட வேண்டும். 5வது இடத்திற்கு அக்சர் படேல் பொருத்தமானவர் என நினைத்தால், அதே இடத்தில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும்,''என்றார். இந்திய அணியின் முன்னாள் கீப்பர் தீப் தாஸ்குப்தா கூறுகையில்,''மிடில் ஆர்டரில் இடது கை பேட்டர் தான் வேண்டும் என்றால், ரிஷாப் பன்ட் பொருத்தமானவர். இவரை 4வது இடத்தில் களமிறக்கலாம். அடுத்து ஸ்ரேயாஸ், அக்சர், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா வரலாம். 6வது இடத்தில் ராகுலை களமிறக்குவது பலன் தராது. இவரை 4வது இடத்தில் களமிறக்கலாம். 'பினிஷிங்' திறன் வாய்ந்த ஸ்ரேயாஸ் 6வது இடத்தில் வரலாம்,''என்றார்.

ரிஷாப் பன்ட் காயம்

சாம்பியனஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் கேப்டன் ரோகித், கோலி, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நேற்று துபாயில் பயிற்சியில் ஈடுபட்டனர். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து ரிஷாப் பன்ட்டின் இடது முழங்கால் பகுதியில் பலமாக தாக்கியது. வலியால் அவதிப்பட்ட இவருக்கு 'பிசியோதெரபிஸ்ட்' கமலேஷ் ஜெயின் சிகிச்சை அளித்தார். விரைவாக மீண்ட ரிஷாப், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட, சக வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை