உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கைகொடுத்த இந்திய வேகங்கள்

கைகொடுத்த இந்திய வேகங்கள்

பெர்த்: 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடர் முதல் டெஸ்டில் பேட்டர்கள் ஏமாற்ற இந்திய அணி 150 ரன்னுக்கு சுருண்டது. பவுலர்கள் கைகொடுக்க, ஆஸ்திரேலியா திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தியது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. ‛டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா, பேட்டிங் தேர்வு செய்தார்.ராகுல் போராட்டம்இந்திய அணிக்கு ராகுல், ஜெய்ஸ்வால் (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. 23 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார் தேவ்தத் படிக்கல். பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோலி, வழக்கம் போல ஏமாற்றினார். இவர் 4 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.நீண்ட நேரம் தாக்குப்பிடித்த ராகுல் 26 ரன் எடுத்து, ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்தார்.துருவ் ஜுரல் 11 ரன்னில் அவுட்டாக, வாஷிங்டன் 4 ரன் மட்டும் எடுத்து திரும்பினார். ரிஷாப் 37 ரன்னில் அவுட்டானார். ஹர்ஷித் ராணா (7), பும்ரா (8) நீடிக்கவில்லை. நிதிஷ் குமார் 41 ரன் எடுத்து கைகொடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் 4, ஸ்டார்க் 2, கம்மின்ஸ் 2, மார்ஷ் 2 விக்கெட் சாய்த்தனர். பும்ரா நம்பிக்கைஅடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய 'வேகங்கள்' தொல்லை கொடுத்தனர். பும்ரா பந்தில் மெக்ஸ்வீனி (10), கவாஜா (8), ஸ்மித் (0) வெளியேறினர். டிராவிஸ் ஹெட்டை (11), ஹர்ஷித் ராணா போல்டாக்கினார். சிராஜ் பந்தில் மிட்சல் மார்ஷ் (6), லபுசேன் (2) சிக்கினர். மீண்டும் மிரட்டிய பும்ரா, கேப்டன் கம்மின்சை (3) திருப்பி அனுப்பினார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்து, 83 ரன் பின்தங்கி இருந்தது. பும்ரா 4, சிராஜ் 2, ஹர்ஷித் 1 விக்கெட் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை