உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / களமிறங்கும் ரோகித், கோலி * இலங்கை ஒருநாள் தொடர் துவக்கம்

களமிறங்கும் ரோகித், கோலி * இலங்கை ஒருநாள் தொடர் துவக்கம்

கொழும்பு: இந்தியா, இலங்கை மோதும் ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது. கேப்டன் ரோகித், கோலி களமிறங்குகின்றனர்.இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. 'டி-20' உலக கோப்பை வென்ற பின் ஓய்வில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 'சீனியர்' கோலி இத்தொடரில் களமிறங்குகின்றனர்.அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) வரவுள்ள நிலையில் புதிய பயிற்சியாளர் காம்பிருடன் இணைந்து, இந்திய அணியை மீண்டும் சிறப்பான முறையில் கட்டமைக்க வேண்டிய நிலையில் ரோகித் உள்ளார்.துவக்கத்தில் ரோகித், சுப்மன் கில், அடுத்த கோலி வரிசையாக களமிறங்குவர். இதன் பிறகு தான் அணித்தேர்வில் சிக்கல் ஏற்பட உள்ளது. கடந்த 21 ஒருநாள் போட்டியில் லோகேஷ் ராகுல் 834 ரன் குவித்துள்ளார். தவிர தென் ஆப்ரிக் தொடரில் கேப்டனாகவும் பங்கேற்றுள்ளார்.மறுபக்கம் விபத்தில் இருந்து மீண்ட ரிஷாப் பன்டும் அணியில் உள்ளார். இதனால் யாரை விக்கெட் கீப்பராக சேர்ப்பது, ஒருவேளை இருவரையும் சேர்த்தால், ஸ்ரேயாசை (2023ல் 846 ரன்) என்ன செய்வது என குழப்பம் நிலவுகிறது.ரியான் வாய்ப்புபந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஜோடி சேரலாம். சுழலில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் கூட்டணி பலமாக உள்ளது. அதேநேரம் 'டி-20' தொடரில் அசத்திய ரியான் பராக்கும் போட்டியில் உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்கான பாண்ட்யா பங்கேற்காத நிலையில், வேகப்பந்து ஆல் ரவுண்டர் அடிப்படையில் ஷிவம் துபேவும் அணியில் இடம் பெறலாம்.ஜூனியர், சீனியர்அசலங்கா தலையமையிலான இலங்கை அணியை பொறுத்தவரையில் ஜூனியர், சீனியர் என கலந்த கலவையாக உள்ளது. 'டி-20' தொடரில் 3 போட்டியிலும் துவக்கம் சிறப்பாக இருந்தது. இடையில் திடீரென ஏற்பட்ட சரிவு, மீண்டும் தொடராது என நம்பலாம். மற்றபடி நிசங்கா, குசல் மெண்டிஸ், சமரவிக்ரமா, ஹசரங்கா, பதிரானா உள்ளிட்டோர் இந்திய அணிக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர்.100 வது வெற்றி நோக்கி...இந்தியா, இலங்கை அணிகள் 168 போட்டியில் மோதின. இதில் இந்தியா 99ல் வென்றது. 57ல் தோற்றது. 1 போட்டி 'டை' ஆக, 11 போட்டிக்கு முடிவில்லை. இன்று அசத்தினால் 100 வது வெற்றி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ