உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தோனி - பதிரானா வீடியோ உண்மையா...

தோனி - பதிரானா வீடியோ உண்மையா...

சென்னை: தோனியின் காலை தொட்டு பதிரானா ஆசி பெற்றதாக வெளியான 'வீடியோ' பொய்யானது.சென்னை, குஜராத் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. சென்னை அணிக்காக முதல் போட்டியில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் பதிரானா, இம்முறை அணியில் சேர்க்கப்பட்டார். இதில் 150.6 கி.மீ., வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். 2024 தொடரில் அதிவேகமாக பந்துவீசிய பவுலர் ஆனார்.இப்போட்டியில் பந்து வீசுவதற்கு முன், தோனி அருகில் சென்ற பதிரானா, அவரது காலை தொட்டு ஆசி பெற்றார் என ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.உண்மையில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இதுகுறித்து மற்றொரு திசையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ நேற்று வெளியானது. இதில் தோனிக்கு அருகில் வரும் பதிரானா, பவுலர்கள் பந்து வீசுவதற்காக 'மார்க்' செய்யும் 'பேட்ஜை' எடுத்துச் செல்கிறார். மற்றபடி தோனி காலில் பதிரானா விழவில்லை என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்