ஜோ ரூட் நம்பர்-3
மான்செஸ்டர்: டெஸ்ட் அரங்கில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 3வது இடம் பிடித்தார்.இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜோ ரூட், 62* ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.இது, ஜோ ரூட்டின் 64வது அரைசதம் ஆனது. இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் டிராவிட் (63 அரைசதம்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (62) ஆகியோரை முந்தி 3வது இடத்தை கைப்பற்றினார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (68 அரைசதம்), வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (66) உள்ளனர்.