உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா-நேபாளம் மோதல் * தெற்காசிய கால்பந்து அரையிறுதியில்...

இந்தியா-நேபாளம் மோதல் * தெற்காசிய கால்பந்து அரையிறுதியில்...

திம்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) அரையிறுதியில் இன்று இந்தியா, நேபாள அணிகள் மோதுகின்றன.பூடானில் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 7 அணிகள் மோதுகின்றன. இதில் ஐந்து முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் இந்திய அணி, 'ஏ' பிரிவில் வங்கதேசம், மாலத்தீவுடன் இடம் பெற்றது. லீக் சுற்றில் வங்கதேசம் (1-0), மாலத்தீவு (3-0) அணிகளை வென்ற இந்தியா, 6 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.இதில் இன்று, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கு லுன்கிம் இதுவரை 2 கோல் அடித்து கைகொடுக்கிறார். தவிர தலா ஒரு கோல் அடித்த சுமித் சர்மா, சாம்சன், கேப்டன் முகமது கைப், கோல் கீப்பர் சுராஜ் சிங் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.கடந்த ஆண்டு தெற்காசிய சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்தியா, நேபாளத்தை 1-0 என வென்றது. இந்த நம்பிக்கையுடன் இன்று இந்தியா வென்று, பைனலுக்கு செல்லக் காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ