வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அடி வாங்கின பிறகுதான் சங்கி போர்டுக்கு நினைவு வந்து உள்ளது போல உருப்படாத போர்டு
Bumravukku pressure illai, Bumravin Unorthodox
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ஷமி பங்கேற்க உள்ளார்.இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 34, கணுக்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதிலிருந்து மீண்ட இவர், ரஞ்சி கோப்பையில் பெங்கால் சார்பில் (எதிர்: மத்திய பிரதேசம்) 43 ஓவர் வீசினார். தற்போது சையது முஷ்தாக் அலி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடருக்கு பின், என்.சி.ஏ., சார்பில் ஷமியின் உடற்தகுதி பரிசோதிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பார்டர்-கவாஸ்கர்' தொடரின் கடைசி 2 டெஸ்டில் (மெல்போர்னில் டிச. 26-30, சிட்னியில் 2025, ஜன. 3-7) விளையாடுவார். ஏற்கனவே இவரது கிரிக்கெட் உபகரணங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டன.இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ''போதுமான உள்ளூர் போட்டிகளில் ஷமி விளையாடிவிட்டார். இவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினால் நல்லது. பும்ரா மீதான சுமை குறையும்,'' என்றார்.
அடி வாங்கின பிறகுதான் சங்கி போர்டுக்கு நினைவு வந்து உள்ளது போல உருப்படாத போர்டு
Bumravukku pressure illai, Bumravin Unorthodox