உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: ரியான் ரிக்கல்டன் இரட்டை சதம்

தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: ரியான் ரிக்கல்டன் இரட்டை சதம்

கேப்டவுன்: ரியான் ரிக்கல்டன் இரட்டை சதம் விளாச, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 615 ரன் குவித்தது.தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கேப்டவுனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 316/4 ரன் எடுத்திருந்தது. ரிக்கல்டன் (176), பெடிங்காம் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் டேவிட் பெடிங்காம் (5) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ரியான் ரிக்கல்டன், டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கைல் வெர்ரின்னே (100), தன்பங்கிற்கு சதம் விளாசினார். ரிக்கல்டன் 259 ரன்னில் (29 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். மார்கோ யான்சென் (62), கேஷவ் மகாராஜ் (40) கைகொடுத்தனர்.தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 615 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ரபாடா (6) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது அபாஸ், சல்மான் ஆகா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 64/3 ரன் எடுத்திருந்தது. பாபர் ஆசம் (31), முகமது ரிஸ்வான் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

259 ரன்

டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் (259) குவித்த தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில் 7வது இடத்தை கிரீம் ஸ்மித்துடன் பகிர்ந்து கொண்டார் ரிக்கல்டன். முதலிடத்தில் ஆம்லா (311* ரன், எதிர்: இங்கிலாந்து, 2012, லண்டன், ஓவல்) உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை