மேலும் செய்திகள்
மும்பை அணி ‘ஹாட்ரிக்’: ரஞ்சி கோப்பையில் ஆதிக்கம்
30-Oct-2026
ராவல்பிண்டி: இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட், ராவல்பிண்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 98, பாகிஸ்தான் 325 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 309/9 ரன் எடுத்திருந்தது. நேற்று, 4ம் நாள் ஆட்டம் நடந்தது. முகமது அபாஸ் பந்தில் அசிதா பெர்ணான்டோ (2) அவுட்டானார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 316 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மிலன் ரத்னாயகா (66) அவுட்டாகாமல் இருந்தார். பின், 90 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அஸான் அவைஸ் (32*), ஆமர் ஜமால் (34*) கைகொடுத்தனர். 2வது இன்னிங்சில் 90/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி, தொடரை 1-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
30-Oct-2026