உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வரமாக வருண் சக்ரவர்த்தி: இர்பான் பதான் கணிப்பு

வரமாக வருண் சக்ரவர்த்தி: இர்பான் பதான் கணிப்பு

புதுடில்லி: ''உலக கோப்பையில் ('டி-20') வருண் சக்ரவர்த்தி அதிக விக்கெட் கைப்பற்றுவார்,'' என, இர்பான் பதான் தெரிவித்தார்.இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை (2026, பிப். 7 - மார்ச் 8) நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, 'ஏ' பிரிவில் அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளார்.இதுகுறித்து முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் 41, கூறுகையில், ''இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இதற்கு பும்ரா, வருண் சக்ரவர்த்தி முக்கிய காரணம். 'டி-20' உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் வருண், பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஓவர்கள் திருப்பமாக அமையும். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் வருண் முதலிடம் பிடிப்பார். ஏனெனில் அவரது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை