மேலும் செய்திகள்
அபிஷேக் சர்மா முதல் அனுபவம்: டிவிலியர்ஸ் ஆரூடம்
06-Oct-2025
ஆக்லாந்து: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஓய்வை அறிவித்தார்.நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் 35. கடந்த 2010ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், இதுவரை 105 டெஸ்ட் (9276 ரன்), 175 ஒருநாள் (7256), 93 சர்வதேச 'டி-20' (2575) போட்டிகளில் விளையாடி உள்ளார்.வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இடம் பெறவில்லை. இதனையடுத்து சர்வதேச 'டி-20' போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வை அறிவித்தார் வில்லியம்சன். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். கடந்த 2011ல் சர்வதேச 'டி-20' போட்டியில் அறிமுகமான இவர், கடைசியாக பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் (2024, டிரினிடாட்) விளையாடினார். உலக கோப்பை ('டி-20') அரங்கில் ஒரு பைனல் (2021), இரண்டு அரையிறுதியில் (2016, 2022) பங்கேற்றார். தவிர இவர், 75 சர்வதேச 'டி-20' போட்டிகளுக்கு (39 வெற்றி, ஒரு 'டை', 34 தோல்வி) கேப்டனாக செயல்பட்டார்.வில்லியம்சன் கூறுகையில், ''நீண்ட காலமாக சர்வதேச 'டி-20' போட்டிகளில் விளையாடியது, மறக்க முடியாத நினைவுகளையும், சிறந்த அனுபவத்தையும் கொடுத்தது. ஓய்வு பெற சரியான நேரமாக கருதுகிறேன். அடுத்து நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கு சிறந்த அணியை இப்போதிருந்தே தயார் செய்யலாம். அடுத்து வரும் தொடர்களில் சிறப்பாக செயல்பட கேப்டன் சான்ட்னருக்கு வாழ்த்துகள்,'' என்றார்.நியூசி., அணிநியூசிலாந்து செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, நவ. 5ல் ஆக்லாந்தில் நடக்கிறது. இத்தொடருக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி: சான்ட்னர் (கேப்டன்), பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, டபி, ஜேமிசன், டேரில் மிட்செல், நீஷாம், ரச்சின் ரவிந்திரா, டிம் ராபின்சன், டிம் செய்பெர்ட், நாதன் ஸ்மித், இஷ் சோதி, ஜாக் பவுல்க்ஸ்.
06-Oct-2025