மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
ஸ்டட்கர்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின். ஜெர்மனியில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஸ்டட்கர்ட்டில் நடந்த முதல் காலிறுதியில் ஸ்பெயின் ('நம்பர்-8'), ஜெர்மனி ('நம்பர்-16') அணிகள் மோதின. ஸ்பெயின் அணிக்கு 51வது நிமிடத்தில் டேனி ஆல்மோ, கோல் அடித்து கைகொடுத்தார். போட்டி முடிய 1 நிமிடம் இருந்த போது, ஜெர்மனியின் புளோரியன் (89வது) ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. போட்டி முடிய ஒரு நிமிடம் (119வது) இருந்த போது, டேனி கொடுத்த பந்தை, தலையால் முட்டி கோல் அடித்தார் மெரினோ. ஸ்பெயின் 2-1 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. சொந்தமண்ணில் ஜெர்மனி, சோகத்துடன் வெளியேறியது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025