மேலும் செய்திகள்
ரோனால்டோ புறக்கணிப்பு * ரசிகர்கள் கோபம்
20-Nov-2025 | 1
உலக கோப்பை: ஜெர்மனி தகுதி
18-Nov-2025
ஈஸ்ட் பெங்கால் வெற்றி * பெண்கள் கால்பந்தில்...
17-Nov-2025
தோகா: ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 1-0 என, ஆஸ்திரியாவை வென்றது.கத்தாரில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 20வது சீசன் நடந்தது. தோகாவில் நடந்த பைனலில் போர்ச்சுகல், ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 32வது நிமிடத்தின் போர்ச்சுகல் வீரர் அனிசியோ ஒரு கோல் அடித்தார். முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக உலக கோப்பை வென்றது.இத்தாலி வெற்றி: மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிரேசில், இத்தாலி அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 0-0 என சமநிலையில் இருந்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய இத்தாலி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3வது இடத்தை கைப்பற்றியது.அதிக கோல் (8) அடித்தவருக்கான 'கோல்டன் பூட்' விருதை ஆஸ்திரியாவின் ஜோஹன்னஸ் மோசர் வென்றார்.
20-Nov-2025 | 1
18-Nov-2025
17-Nov-2025