உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இந்தியாவுக்கு ஷாக் * வங்கதேசத்திடம் வீழ்ந்தது

கால்பந்து: இந்தியாவுக்கு ஷாக் * வங்கதேசத்திடம் வீழ்ந்தது

லலித்புர்: தெற்காசிய கால்பந்து அரையிறுதியில் இந்திய அணி 'பெனால்டி ஷூட் அவுட்டில்', 3--4 என வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. தெற்காசிய கால்பந்து (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 6வது சீசன் நேபாளத்தில் நடக்கிறது. 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடந்தன. நேற்று அரையிறுதி போட்டி நடந்தன. 'பி' பிரிவில் முதலிடம் பெற்ற 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, 'ஏ' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேசத்தை எதிர்கொண்டது. போட்டியின் 36 வது நிமிடத்தில் வங்கதேச வீரர் அப்துல் இஸ்லாம் சாகிப் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 0-1 என பின்தங்கியது. இரண்டாவது பாதியில் இதை சமன் செய்ய இந்திய வீரர்கள் போராடினர். போட்டியின் 74வது நிமிடத்தில் இந்திய வீரர் நாவோபா கொடுத்த பந்தை பெற்ற கேப்டன் ரிக்கி மீட்டெய், அப்படியே கோலாக மாற்றினார். முடிவில் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்டுக்கு' சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. இந்தியா சார்பில் 3 கோல் மட்டும் அடிக்கப்பட்டன. முதல், கடைசி வாய்ப்பை காங்டே, ஆகாஷ் வீணடித்தனர். வங்கதேசம் சார்பில் முதல் 4 வாய்ப்பிலும் கோல் அடிக்கப்பட்டன. முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து, வெளியேறியது.நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் நேபாள அணி 4-1 என ('பெனால்டி ஷூட் அவுட்) வெற்றி பெற்றது. நாளை நடக்கும் பைனலில் நேபாளம்-வங்கதேச அணிகள் மோத உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை