உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் அபினவ் தேஷ்வால்: டெப்லிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் அபினவ் தேஷ்வால்: டெப்லிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில்

டோக்கியோ: 'டெப்லிம்பிக்ஸ்' துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபினவ் தேஷ்வால் (25 மீ., 'பிஸ்டல்') தங்கம் வென்றார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்ஸ்' 25வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அபினவ் தேஷ்வால் (575.13 புள்ளி), சேத்தன் ஹன்மந்த் சப்கல் (573.21) முதலிரண்டு இடம் பிடித்தனர்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய அபினவ், 44 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இது, இம்முறை அபினவ் கைப்பற்றிய 3வது பதக்கம். ஏற்கனவே ஒரு தங்கம் (கலப்பு அணி 10 மீ., 'ஏர் பிஸ்டல்'), ஒரு வெள்ளி (தனிநபர் 10 மீ., 'ஏர் பிஸ்டல்') வென்றிருந்தார்.சேத்தன் ஹன்மந்த், 27 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்து ஏமாற்றினார். இம்முறை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 6 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, 15 பதக்கம் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை