உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: உலக பாரா வில்வித்தையில்

இந்தியாவுக்கு இரண்டு தங்கம்: உலக பாரா வில்வித்தையில்

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தையில் இந்தியா நேற்று இரண்டு தங்கம் கைப்பற்றியது. ஆமதாபாத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் ('ஸ்டேஜ்-3') நடக்கிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட 19 நாடுகளில் இருந்து 109 பேர் பங்கேற்கின்றனர்.ரீகர்வ் அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், விஜய் ஜோடி, சுலோவாகியாவின் டேவிட், டெனிஸ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை இழந்த இந்தியா (0-2), பின் தொடர்ந்து மூன்று செட்டுகளை வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 6-2 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. காம்பவுண்டு ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், தோமன் குமார் ஜோடி, ஈராக்கின் அபாஸ், அன்வர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்தியா 152-139 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. 'வீல் சேரில்' வெள்ளிஅணிகளுக்கான வீல் சேர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்வாதி சவுத்ரி, அடில் முகமது ஜோடி, செக் குடியரசின் சர்கா, டேவிட் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-5 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பைனலில் இந்தியாவின் பூஜா, பாவ்னா ஜோடி, சீனாவின் லியாங், சென் ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-6 என தோற்க, வெள்ளிப்பதக்கம் பெற்றது. வீல் சேர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஸ்வாதி, 6-2 என கஜகஸ்தானின் எலெனாவை சாய்த்து, வெண்கலப் பதக்கம் பெற்றார். இதுவரை ஏழுஉலக பாரா வில்வித்தையில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்