மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
அஸ்தானா: ஆசிய குத்துச்சண்டை (யூத், 22 வயது) தொடரில் இந்தியாவுக்கு 22 பதக்கம் உறுதியாகின.கஜகஸ்தானில் ஆசிய யூத், 22 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான யூத் 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரிஜேஷ், மங்கோலியாவின் டாலைபெக் ஐசூர் மோதினர். அபாரமாக ஆடிய பிரிஜேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராகுல் குண்டு (75 கிலோ), ஆர்யன் (92), சாகர் ஜாகர் (60), ஆர்யன் (51), யஷ்வர்தன் சிங் (63.5), பிரியான்ஷு (71) வெற்றி பெற்றனர்.மற்ற இந்திய வீரர்களான சுமித் (67 கிலோ), சாஹில் (80) அரையிறுதியில் தோல்வியடைந்தனர்.22 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதியில் இந்தியாவின் துருவ் சிங் (80 கிலோ), குட்டி (48), பூணம் (57), பிரீத்தி (54), விஷ்வநாத் சுரேஷ் (48), முஸ்கான் (75), ஆல்பியா பதான் (81) வெற்றி பெற்றனர்.இத்தொடரில் இந்திய நட்சத்திரங்கள் 22 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதில் 12 பெண்கள் அடங்குவர். ஏழு பேர் பைனலுக்கு முன்னேறினர்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025