| ADDED : ஜூலை 04, 2024 09:22 PM
இத்தாலி தலைநகர் ரோமில் 17வது ஒலிம்பிக் போட்டி (1960, ஆக. 25 - செப். 11) நடந்தது. துவக்க விழாவில் இத்தாலி வீரர் ஜியன்கார்லோ பெரிஸ், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். மற்றொரு இத்தாலி வீரர் அடோல்போ கோன்சோலினி, ஒலிம்பிக் உறுதி மொழி கூறினார்.அமெரிக்க வீராங்கனை விம்லா ருடோல்ப், 100, 200 மீ., ஓட்டம், 400x100 மீ., தொடர் ஓட்டப் பந்தயத்தில் மூன்று தங்கம் வென்றார். ஒலிம்பிக் ஓட்டத்தில் மூன்று தங்கம் வென்ற முதல் அமெரிக்க வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இவர் குழந்தை பருவத்தில் போலியோ நோய்களால் அவதியுற்றார். சிசிச்சைக்கு பிறகு எழுச்சி கண்டு, ஒலிம்பிக்கில் சாதனை படைத்து வியக்க வைத்தார்.ஆண்களுக்கான ஹாக்கி பைனலில் இந்திய அணி 0-1 என பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக்கில் பாகிஸ்தானுக்கு முதல் தங்கம் கிடைத்தது.ரஷ்யா 43 தங்கம் உட்பட 103 பதக்கம் பெற்று முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய இத்தாலி 13 தங்கம் உட்பட 36 பதக்கங்களுடன் 3வது இடத்தை பெற்றது.