உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: அர்ஜுன் முதலிடம்

செஸ்: அர்ஜுன் முதலிடம்

மெனோர்கா: மெனோர்கா ஓபன் செஸ் தொடரின் 8வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார்.ஸ்பெயினில் மெனோர்கா ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. இதன் 8வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 20, ஆர்யன் சோப்ரா 14, மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் 62வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.மற்றொரு 8வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், போலந்தின் ஜக்குப் சீமன் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அரவிந்த் 55வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் நிகால் சரின், சகவீரர் பிரணவ் ஆனந்திடம் தோல்வியடைந்தார்.எட்டு சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆர்யன் சோப்ரா, அரவிந்த், பிரணவ் ஆனந்த், தலா 6 புள்ளிகளுடன் 8வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை