உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: குகேஷிடம் வீழ்ந்தார் விதித்

செஸ்: குகேஷிடம் வீழ்ந்தார் விதித்

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் 8வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், சகவீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தியை வீழ்த்தினார்.கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்கின்றனர். இதன் 8வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு 8வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, பிரான்சின் பிரூசா அலிரேசா மோதினர். இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 40வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, சகவீரர் பேபியானோ காருணாவை தோற்கடித்தார்.எட்டு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் குகேஷ், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி தலா 5.0 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் நகமுரா, இந்தியாவின் பிரக்ஞானந்தா தலா 4.5 புள்ளிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அடுத்த இரு இடங்களில் அமெரிக்காவின் காருணா (4.5 புள்ளி), இந்தியாவின் விதித் குஜ்ராத்தி (3.5) உள்ளனர்.

ஹம்பி வெற்றி

பெண்களுக்கான 8வது சுற்றில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, வைஷாலி மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி 63வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். எட்டு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ஹம்பி, பல்கேரியாவின் சலிமோவா தலா 3.5 புள்ளிகளுடன் 5வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். வைஷாலி (2.5) 8வது இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை