உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: ஹரிகா சாம்பியன்

செஸ்: ஹரிகா சாம்பியன்

ஹாங்காங்: ஆசிய 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்தியாவின் ஹரிகா சாம்பியன் ஆனார்.ஹாங்காங்கில் ஆசிய 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 'பிளிட்ஸ்' பிரிவில் 46 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஹரிகா துரோணவள்ளி, தாரியா, இஷா உள்ளிட்டோர் விளையாடினர். மொத்தம் 13 சுற்று போட்டிகள் நடந்தன. 9 வெற்றி, 3 'டிரா' (1 தோல்வி) செய்த ஹரிகா, 10.5 புள்ளிகள் பெற்று, சாம்பியன் ஆனார். தொடர்ந்து பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவில் போட்டி நடந்தது. 52 பேர் பங்கேற்றனர். இதிலும் சிறப்பாக செயல்பட்ட 11 சுற்றில் 6 வெற்றி, 5 'டிரா' செய்ய, 8.5 புள்ளிகள் பெற்று, சாம்பியன் ஆனார். ஆண்களுக்கான ஓபன் 'பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் கவுதம் கிருஷ்ணா, 11 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !