மேலும் செய்திகள்
ஜூனியர் ஹாக்கி: தமிழகம் 'டிரா'
13-Sep-2024
லண்டன்: குளோபல் செஸ் லீக் தொடரில் ஆனந்த்-கார்ல்சன் மோதிய போட்டி 'டிரா' ஆனது.சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்தியாவின் முன்னணி நிறுவனம் சார்பில் 'குளோபல் செஸ் லீக்' தொடர் (பரிசு ரூ. 4.20 கோடி) நடத்தப்படுகிறது. ஐ.பி.எல்., பாணியில் நேற்று துவங்கிய இத்தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். ரவுண்டு ராபின் முறையில், தலா 20 நிமிடம் மட்டும் போட்டி நடக்கும். நேற்று இந்திய ஜாம்பவான் ஆனந்தின் காங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ், 'நம்பர்-1' வீரர், நார்வேயின் கார்ல்சனின் ஆல்பைன் அணிகள் மோதின. நீண்ட இடைவெளிக்குப் பின் நடந்த ஆனந்த்-கார்ல்சன் மோதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போட்டி 48 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. கார்ல்சன் அணியின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. ஆனந்த் அணியின் வைஷாலி, ஹோ இபானிடம் தோல்வியடைந்தார். முடிவில் கார்ல்சன் அணி 11-6 என வெற்றி பெற்றது. மும்பை தோல்விநேற்று நடந்த முதல் போட்டியில் மும்பை மாஸ்டர்ஸ், அமெரிக்கன் காம்பிட்ஸ் அணிகள் மோதின. மும்பையின் ஹரிகா, எலிசபெத்தை வீழ்த்தினார். கேப்டன் மேக்சிம் வாசியர், பீட்டர் சிவில்டர் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். விதித் குஜ்ராத்தி, ஜான் டுடாவிடம் (அமெரிக்கா) தோல்வியடைந்தார். மும்பை அணி 6-11 என தோல்வியடைந்தது.
13-Sep-2024