உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புதிய கிராண்ட்மாஸ்டர் அஸ்வத் * 12 நாளில் 3 பேர் அபாரம்

புதிய கிராண்ட்மாஸ்டர் அஸ்வத் * 12 நாளில் 3 பேர் அபாரம்

புதுடில்லி: இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் அஸ்வத்.சர்வதேச கிராண்ட்மாஸ்டர் 'ரவுண்டு ராபின்' செஸ் தொடர் புனேயில் நடந்தது. இந்தியா சார்பில் அபிஜீத் குப்தா உட்பட 10 பேர் பங்கேற்றனர். இந்திய வீரர் அஸ்வத், 9 சுற்றில் 6 வெற்றி, 2 'டிரா' செய்து, 7.0 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.இதையடுத்து, 'கிராண்ட்மாஸ்டர்' பட்டம் பெறுவதற்கான மூன்றாவது அந்தஸ்தை எட்டிய அஸ்வத், இந்தியாவின் புதிய 'கிராண்ட்மாஸ்டர்' ஆனார். தற்போது இவர் 2517 புள்ளி பெற்றுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்தவர் அஸ்வத். கடந்த 2025, ஏப்.,ல் ஜெர்மனியில் நடந்த கிரென்கே தொடர், ஹங்கேரியின் புடாபெஸ்ட் (௨௦௨௫ டிச.,)தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் இரு அந்தஸ்து, 2500 'எலோ ரேட்டிங்' புள்ளிகளை எட்டி இருந்தார்.மூன்று பேர்சமீபத்தில் கோவாவின் ஈதன் வாஸ் 14, தமிழகத்தின் ஹர்ஷவர்தன் 23, அஸ்வத் 18, என கடந்த 12 நாளில் மூன்று இந்திய வீரர்கள் கிராண்ட்மாஸ்டர் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை