உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: அர்ஜுன் வெற்றி

செஸ்: அர்ஜுன் வெற்றி

புடாபெஸ்ட்: ‘டோட்டல்’ செஸ் 8வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், பிரான்சின் மாக்சிம் வாசியர்–லாக்ரேவை வென்றார். ஹங்கேரியில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, வைஷாலி உட்பட 24 பேர் பங்கேற்கின்றனர். ‘டி’ பிரிவு 7வது சுற்று போட்டியில் அர்ஜுன் (கருப்பு), பிரான்சின் மாக்சிம் வாசியர்–லாக்ரேவ் (வெள்ளை) மோதினர். இப்போட்டி 30வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. அடுத்து நடந்த 8வது சுற்றில் எழுச்சி கண்ட அர்ஜுன் (வெள்ளை), 52வது நகர்த்தலில் வாசியர்–லாக்ரேவை (கருப்பு) வீழ்த்தினார். ‘டி’ பிரிவுக்கான மற்றொரு 7, 8வது சுற்று போட்டிகளில் ஏமாற்றிய வைஷாலி, அமெரிக்காவின் சோ வெஸ்லேயிடம் தோல்வியடைந்தார். ‘பி’ பிரிவு 7வது சுற்றில் பிரக்ஞானந்தா (கருப்பு), 43வது நகர்த்தலில் ஹங்கேரியின் ரிச்சர்ட் ராபோர்ட்டிடம் (வெள்ளை) வீழ்ந்தார். இவர்கள் மோதிய 8வது சுற்று போட்டி 60வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. ‘டி’ பிரிவில் 3வது இடத்தில் உள்ள அர்ஜுன் (13 புள்ளி) அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். தங்களது பிரிவில் கடைசி இடத்தில் உள்ள வைஷாலி (4 புள்ளி, ‘டி’), பிரக்ஞானந்தா (5 புள்ளி, ‘பி’) அரையிறுதி வாய்ப்பை இழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை