உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உயரம் தாண்டுதல்: சபாஷ் சர்வேஷ்

உயரம் தாண்டுதல்: சபாஷ் சர்வேஷ்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சர்வேஷ் குஷாரே பங்கேற்றார். அதிகபட்சமாக 2.23 மீ., தாண்டிய சர்வேஷ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் இவர் வென்ற 2வது தங்கம். சமீபத்தில் அசுசா பசிபிக் பல்கலை.,யில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.இந்திய ராணுவ வீரரான சர்வேஷ், கடந்த ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். நடப்பு சீசனில் தனது சிறந்த செயல்பாட்டை (2.23 மீ.,) பதிவு செய்த இவரால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கை (2.33 மீ.,) அடைய முடியவில்லை. தற்போது 39வது இடத்தில் உள்ள இவர், தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி