ஜூனியர் தடகளம்: அபிநயா தங்கம்
சென்னை: இந்திய தடகள சங்கம், தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 20 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கான, 41-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதன் 20 வயதுக்கு உட்பட்ட மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தின் அபிநயா ராஜராஜன், போட்டி தூரத்தை 11.49 வினாடியில் கடந்து, தனது சொந்த சாதனையை முறியடித்து, புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதற்கு முன் 2025-ல் கொச்சியில் நடந்த தேசிய போட்டியில் 11.54 வினாடியில், அவர் பந்தய துாரத்தை கடந்ததே, சாதனையாக இருந்தது.